Monday 1 February 2016

உடல் ஆரோக்கியம்

          சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் என்பார்கள் நம் முன்னோர்கள். மூன்று வேளை நல்ல சத்துக்கள் உடய உடலுக்கு தேவையான அளவு உணவு. தினமும் உடலுக்கு தேவையான அளவு நல்ல உடல் பயிர்சி. சரியான அளவு நித்திரை மற்றும் அமைதியான நல்ல மனம். இவைகள் எங்கள் உடல் மற்றும் மூளையை அரேக்கியத்துடன் இயங்க உதவுகிறது.

          நம்மில் பலரும் உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாது இருப்பது மிகவும் கவலையானது. நாம் உணவு பற்றி படிப்பது மிகவும் குறைவு. உணவு எமது உடல் எடை மற்றும் உடல் பருமனை கூட்டவும் குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. உடலுக்கு தேவையான சத்துக்கள் உணவில் இருந்து கிடைப்பதால் நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேவையான அளவு சாப்பிடுவது மிகவும் அவசியம். குழந்தைகள்,சிறியவர்களும் அதிக சத்துள்ள உணவுகள் எடுக்கலாம்.நடுத்தர வயதினரும் முதியவர்களும் உணவில் கவனமாக இருக்கவேண்டும். சாப்பாட்டின் அளவில் கவனமாக இருப்பதோடு அதில் இருக்கும் சத்துக்கள் பற்றிய அறிவும் அவசியம். இனிப்பையும் தேவையில்லாத கொழுப்பு சத்துக்களை தவிர்த்து மாச்சத்தை அளவுடன் எடுப்பது அவசியம். நம்மில் பலருக்கும் உணவின் அளவு தெரியாது சுவைக்கு தகுந்தல்போல் அல்லது  இத்த உணவு நல்லது என நினைத்து அளவுக்கு அதிகமாக உண்கின்றோம். உங்கள் வயிற்றுக்கு தகுந்த அளவு உணவு எடுத்துகொள்லுங்கள். இது மிகவும் முக்கியம். இதைய் எப்படி தெரித்துகொள்வது  விரதங்கள் சிலதை கடைப்பிடித்து பார்க்கலாம். சில     உணவு கட்டுபாட்டை கடைப்பிடிக்கலாம். நிறைய உணவு கட்டுப்பாடு (diet) நடைமுறையில் உள்ளது. இதில் எதுவாவது ஒன்றை கடைப்பிடிக்கலாம். அளவுக்கு அதிகமாக உண்பதால் அவை தேவையற்ற கொழுப்புப்பாக அல்லது வெறுவடிவில் உடலில் தங்கிவிடுகிறது. இப்படி அதிகமாக
சாப்பிட்ட உணவாள் உடலின் பருமன், இடையும் அதிகரிப்பதுடன் நோய்களும் வருகிறது.
     
          பழங்கள் மிகவும் நல்லது அதர்காக பழச்சாறு அதிகம் குடிப்பது நல்லது இல்லை. பழச்சாற்றில் சுவைக்காக சேர்க்கும் பொருட்களில் கவனம் எடுக்கவேண்டும். முந்திரி,பாதாம் போன்ற பருப்பு வகைகளை அதிகம் சப்பிடுவதும் நல்லது இல்லை. இறைச்சி வகைகள் கடல் உணவுகள் என்று எந்த உணவு ஆனாலும் அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லதாக அமையாது.

உணவால் உடல் பருமனைக் குறைக்க வேண்டுமா? மிகவும் குறைந்த உணவை உட்கொள்ளுங்கள். வளமையாக உண்பதைவிட சரிபாதி அளவு சாப்பிடுங்கள்.சாப்பிடுவதற்கு முன் நிறைய தண்ணீர் குடியுங்கள். சாப்பிட்ட பிறகு இளம் சூட்டில் தண்ணீர் குடியுங்கள். மூன்று வேளையாக பிரித்து சாப்பிடுங்கள். சாப்பிடாமல் இருக்காதீர்கள். இடையில் பசித்தால் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடித்தாள் அமிலங்கள் அடிவயிற்றில் தங்காது.

       
இளவயதினர் கராத்தை போன்ற தர்க்காப்பு கலைகள் மற்றும் ஓடுதல், நீந்துதல்  போன்ற தனிநபர் விளையாட்டுக்கள்,குழு சார்ந்த விளையாட்டுக்கள் விளையாடலாம். நடுத்தர வயதினரும் முதியவர்களும் தாங்கள் செய்யும் உடல் பயிற்சியில் கவனமாக இருத்தல் வேண்டும். தமது உடலை வருத்தாமல் இலகுவான உடல் பயிற்சிகளை செய்ய வேண்டும். யோகாசனம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. நடப்பது  போன்ற எளிய உடல் பயிற்சிகளை செய்யலாம்.

          எல்லோரும் தியானம் செய்ய வேண்டும் சிறிய அளவு நேரமாவது. அல்லது ஓர் இடத்தில தனியாக அமைதியாக இருக்கவேண்டும். இது மனதை ஒழுங்துபடுத்த உதவும். எங்களுடைய மனம் எப்படி வேலை செய்கிறது என்று நாம் தெரிந்துகொள்ள முடியும். சரியான அளவு நித்திரை  பழக்கம் அல்லது ஓழுக்கம் என்று சொல்லமுடியும்.

   .